கூரியர் பார்சலில் மண்டை ஓடுகள்; விமான நிலைய சோதனையில் கண்டுபிடிப்பு
மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பட்ட கூரியர் பார்சலில் விமான நிலைய சோதனையின்போது நான்கு மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவிற்கு கூரியர் மூலம் அனுப்பப்படவிருந்த ஒரு பொதியை மெக்சிகோ விமான நிலையத்தில் சோதனை செய்தபோது, அதனுள் நான்கு மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
மத்திய மெக்சிகோவில் உள்ள குவெரேடாரோ இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்தில் அட்டைப் பெட்டிக்குள் அலுமினியத் தாளில் சுற்றப்பட்ட நிலையில் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக National Guard அறிக்கை தெரிவித்துள்ளது.
மெக்சிகோ நாட்டின் மிக வன்முறையான பகுதிகளில் ஒன்றான மைக்கோவாகன் என்ற மேற்குக் கடலோர மாநிலத்திலிருந்து இந்தப் பொதி அனுப்பப்பட்டது, மேலும் இது அமெரிக்காவின் தென் கரோலினாவின் மானிங்கில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டது.
மண்டை ஓடுகளின் வயது, அடையாளம் அல்லது சாத்தியமான நோக்கம் பற்றிய கூடுதல் விவரங்களை தேசிய காவல் (National Guard) அதிகாரிகள் வழங்கவில்லை.
இதுபோன்று, மனித எச்சங்களை அனுப்புவதற்கு தகுதிவாய்ந்த சுகாதார அதிகாரியிடமிருந்து சிறப்பு அனுமதி தேவை, அதுவும் பெறப்படவில்லை.