10 லட்சம் ஃபாலோயர்ஸ்கள் இருந்தால் 5 லட்ச ரூபாய்! அரசின் அதிரடி அறிவிப்பு
சமூக ஊடகங்களில் அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அதிரடி திட்டத்தை ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
சமூக ஊடகவியலாளர்களுக்கு கிடைத்த லக்:
சமூக ஊடகங்களான பேஸ்புக், யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் 10 ஆயிரம் ஃபாலோயர்ஸ்களுக்கு மேல் இருந்தால் அரசின் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஏற்படுத்தி தருவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், லட்சக்கணக்கில் ஃபாலோயர்ஸ்கள் வைத்திருப்பவர்களை அழைத்து, தங்களது பக்கங்களில் அரசின் விளம்பரங்களை ஒளிபரப்புவதன் தொடர்பாக ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.
Horizont
அரசின் அதிரடி அறிவிப்பு:
இது தொடர்பாக ராஜஸ்தான் அரசு கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில்,"10 லட்சம் ஃபாலோயர்ஸ்கள் கொண்ட சமூக ஊடகவியலாளர்கள் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும்" என கூறப்பட்டிருந்தது.
மேலும், 10 ஆயிரத்திற்கும் மேல் ஃபாலோயர்ஸ் இருந்தால், அவர்களுக்கு அரசின் விளம்பரங்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
Get image / Medium
அதன்படி, 10 லட்சத்திற்கும் அதிகமாக ஃபாலோயர்ஸ்களை வைத்திருப்போர் ரூ.5 லட்சம் வரையில் வருவாயை பெற முடியும். அரசின் விளம்பரங்களை மக்களை சென்றடையும் விகிதத்தை வைத்தே பணம் வழங்கப்படும் என்றும், சில வழிகாட்டு நெறிமுறைகளையும் ராஜஸ்தான் அரசு விதித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |