சிரியாவில் நிலநடுக்கம்... திகிலை ஏற்படுத்திய பழைய நினைவுகள்
சிரியா நாட்டை நிலநடுக்கம் ஒன்று அதிரவைத்த நிலையில், அது, 2023இல் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டுவந்து திகிலை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் நிலநடுக்கம்
நேற்று இரவு 11.56 மணியளவில் சிரியா நாட்டை நிலநடுக்கம் ஒன்று அதிரவைத்தது. ரிக்டர் அளவுகோலில் அது 5.5 ஆக பதிவானதாக சிரியா தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
கட்டிடங்கள் இடிந்துவிழுந்துவிடுமோ என அஞ்சி மக்கள் கட்டிடங்களை விட்டு தெருக்களுக்கு ஓடிவந்த நிலையில், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
திகிலை ஏற்படுத்திய பழைய நினைவுகள்
இதற்கிடையில், இந்த நிலநடுக்கம் சிரியா நாட்டவர்களுக்கு பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவந்து திகிலை ஏற்படுத்தியுள்ளது.
அதற்குக் காரணம் என்னவென்றால், 2023ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 6ஆம் திகதி, சிரியாவை பயங்கர நிலநடுக்கம் ஒன்று தாக்கியது.
ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான அந்த நிலநடுக்கம் சிரியாவையும் துருக்கியையும் குலுக்கியதில் 59,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தார்கள்.
தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், கடந்த ஆண்டைப்போல ஏதாவது ஆகிவிடுமோ என பயந்து அலறியடித்துக்கொண்டு மக்கள் ஓடியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |