கழிவறையைப் பயன்படுத்திய பெண்... கண்ட திகிலடைய வைத்த காட்சி
கழிவறைக்குச் சென்ற பெண் ஒருவர், தான் கழிவறையைப் பயன்படுத்திய பிறகு கண்ட திகில் காட்சியைக் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கழிவறையைப் பயன்படுத்தியபின் கண்ட காட்சி
கிறிஸ்டினா பிலிப் என்ற பெண், கழிவறையைப் பயன்படுத்தியபின், தான் பயன்படுத்திய கழிவறைக்குள் 5 அடி நீள பாம்பு ஒன்று இருப்பதைக் கவனித்துள்ளார்.
Image: TikTok/@missycina
தான் அந்த பாம்பைப் பார்த்து திகைத்துப்போய் நிற்க, கழிவறைக்குள் இருந்த அந்த பாம்போ, தன்னை முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்ததாக கிறிஸ்டினா குறிப்பிட, ஆளாளுக்கு, ஏம்மா, கழிவறையைப் பயன்படுத்துவதற்கு முன் கழிவறைக்குள் பார்க்கமாட்டீர்களா என கேள்வி கேட்டிருக்கிறார்கள் சமூக ஊடகங்களில்.
@missycina ♬ original sound - Christina Phillip998
தன்னை அந்த பாம்பு திகிலடைய வைத்துவிட்டதாக அவர் கூற, ஒருவர், இல்லை, இல்லை, நீங்கள்தான் அந்த பாம்பின்மீது சிறுநீர் கழித்து அதை திகிலடைய வைத்துவிட்டீர்கள் என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் பாம்பு பிடிப்பவர்களை அழைத்து அந்த பாம்பை பிடிக்கச் செய்த கிறிஸ்டினா, அதன் அருகே நின்று புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டுள்ளார்.
Image: TikTok/@missycina
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |