ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்
ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தில் இன்று காலை 8 மணியளவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது, பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கியிலிருந்து கிழக்கே 111 கிலோமீட்டர் தொலைவில், 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்க சுனாமியை தூண்டக்கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
கடந்த ஜூலை மாதம் இந்த பகுதியில், 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 4 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |