எனக்குள் 400 வருட ஜின் இருக்கிறார்; மாந்த்ரீகம் மூலம் பணம் பறிக்க முயன்ற 7 பேருக்கு சிறை
ஐக்கிய அரபு அமீரகத்தில் மாந்திரீகம் செய்ததற்காகவும், மற்றவர்களை ஏமாற்றியதற்காகவும் ஏழு பேருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நோயைக் குணப்படுத்தகூடிய 400 ஆண்டுகளுக்கும் மேலான ஜின்கள் (Jinn) தங்கள் வசம் இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, மாந்திரீகம் மற்றும் ஜின் சிகிச்சை செய்வதாக பணம் பறிக்க முயன்ற வழக்கில் பிடிபட்ட 7 பேருக்கும் 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு 50,000 திர்ஹம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதில் ஒருவரின் உடலுக்குள் 400 வருட ஜின் மன்னன் வசிப்பதாகவும், அதனால் கடவுள் தன்னை நோயைக் குணப்படுத்த பிரத்யேகமாக நியமித்ததாகவும் கூறியுள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து மாந்திரீகத்திற்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். அவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டன.
மாந்திரீகம், ஏமாற்றுதல் மற்றும் மாந்திரீகப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஜீனி அல்லது ஜின் என்பது இஸ்லாத்திற்கு முந்தைய மற்றும் இஸ்லாமிய புராணங்களிலிருந்து இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினங்கள் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |