காசாவில் 7 வயது குழந்தை மீது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி சூடு: IDF கொடுத்த விளக்கம்
காசாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 மாத குழந்தை கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 மாத குழந்தை உயிரிழப்பு
இஸ்ரேலிய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையின் ஹெப்ரான் பகுதியில் IDF படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சாம் பஹத் அபு ஹைகல் என்ற 7 மாத குழந்தை கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹெப்ரானின் டெல் ரூமிடா பகுதியில் பஹத் அபு ஹைகல் காரில் சென்ற கொண்டிருந்த போது வாகனத்தை நிறுத்துமாறு இஸ்ரேலிய படையினர் சைகை செய்துள்ளனர்.

காரை நிறுத்திய பிறகு, ராணுவத்தினர் திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் தந்தை பஹத்தின் கையில் குண்டு பாய்ந்ததோடு அவரது மனைவி மற்றும் குழந்தை மீதும் குண்டு பாய்ந்தது.
பகல் நேரத்தில் கண்ணாடி மறைப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நேரத்தில் எங்களை குறிவைத்தே அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக ஹாரெட்ஸ் நாளிதழிடம் பேசிய தந்தை பஹத் தெரிவித்துள்ளார்.
ஆனால் தங்களை நோக்கி வாகனமானது வேகமாக வந்ததால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய தற்காப்பு படை விளக்கமளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |