வங்கதேசத்தில் மீண்டும் கலவரம், 72 பேர் பலி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு, இணையதளம் முடக்கம்
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இம்முறை, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், பலர் காயமடைந்துள்ளனர்.
வன்முறையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசு அமுல்படுத்தியுள்ளது.
கூட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் புகை குண்டுகளை வீசினர்.
வன்முறையை கட்டுப்படுத்த அரசு இணையதள சேவையை முடக்கியுள்ளது. மேலும், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக தளங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.
ஷேக் ஹசீனா வங்காளதேசத்தின் பிரதமராக தொடர்ந்து நான்காவது முறையாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்றார். இருப்பினும், இந்தத் தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) புறக்கணித்தது.
நியாயமான தேர்தலை நடத்த ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று BNP வலியுறுத்தி வந்தது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், நாடு முழுவதும் வன்முறைகளும், போராட்டங்களும் தொடங்கின.
திருமணத்திற்கு முன் மணமகனின் வலிமையை சோதிக்கும் மணமகளின் தாய்.! ஆப்பிரிக்க பழங்குடியினரின் விசித்திரமான வழக்கம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bangladesh Clashes, Sheikh Hasina, Bangladesh Issue