சூடானில் புதைக்குழி ஒன்றில் 87 மனித உடல்கள் கண்டுபிடிப்பு: வெகுஜன படுகொலை என ஐ.நா கண்டனம்
சூடானில் புதைக்குழி ஒன்றில் இருந்து 87 மனித சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடான் உள்நாட்டுப் போர்
சூடானில் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் சூடான் ராணுவமும், துணை ராணுவப்படையினரும் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சண்டையிட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சூடானின் ஓம்டுர்மான் மாகாணத்தில் உள்ள தார் எஸ் சலாம் என்ற பகுதியில் சூடான் ராணுவம் சனிக்கிழமை வான் தாக்குதலை முன்னெடுத்தனர்.
இந்த வான் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் இதனை மறுத்துள்ள துணை ராணுவம் 31 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவித்துள்ளது.
Reuters
தலைநகர் கார்ட்டூமின் பெரும்பாலான பகுதி மற்றும் ஓம்டுர்மன் மற்றும் பஹ்ரியை ஆகியவை துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இவ்வாறு தலைநகர் கார்டூமில் நடைபெற்று வரும் இந்த சண்டையில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
AFP
கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழி
இந்நிலையில் மேற்கு சூடான் பகுதியான டார்பூரில் மனித சடலங்கள் அடங்கிய புதைக்குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒற்றை மனித புதைகுழியில் இருந்து மட்டும் 87 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
AFP
இதற்கிடையில் இதனை வெகுஜன படுகொலை என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததுடன், அது தொடர்பான விசாரணையையும் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |