திருமணம் பற்றிய வாக்குவாதம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் திருமண தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உறவினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர்
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மலகாண்ட் மாவட்டத்தின் பட்கேலா தாலுகாவில் புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்களால் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் கொல்லப்பட்டனர்.
Pakistan Today
திருமண தகராறு
திருமணம் பற்றிய வாக்குவாதமே இந்த கொடூர கொலைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த துணை ராணுவத் துறையினர், ஒன்பது பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக பத்கேலாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
mmnews
கொலையாளிகளை பிடிப்பதற்காக, சம்பவம் நடந்த மலகாண்ட் மாவட்டத்திற்கான அனைத்து நுழைவுப் புள்ளிகளையும் அதிகாரிகள் மூடிவிட்டனர்.
காபந்து முதல்வர் முகமது ஆசம் கான், குற்றவாளிகளை உடனடியாக நீதியின் முன் நிறுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Suspect- Pakistan Today
Pakistan, Marriage, Marriage Dispute
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |