தமிழகத்தில் நள்ளிரவில் குலுங்கிய கட்டடம்! சாலையில் தஞ்சமடைந்த மக்கள்
தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்வால் அடுக்குமாடி கட்டடங்கள் குலுங்கியதாக பொதுமக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
அதிகாலையில் ஏற்பட்ட நில அதிர்வு
இந்திய மாநிலம், தமிழகத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை, கொரட்டூர் பகுதியில் காவல் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தான் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. அங்கு 300க்கு மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வால் கட்டடங்கள் குலுங்கியது. அதனால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து வெளியே ஓடி வந்துள்ளனர். இந்த நில அதிர்வுக்கு காரணம் என்ன என்று தெரியாமல் பொதுமக்கள் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கமா? நில அதிர்வா? குழப்பத்தில் மக்கள்
இது தொடர்பாக அங்குள்ள குடியிருப்பு வாசிகள் கூறும் போது, " நாங்கள் 2019 ஆம் ஆண்டு முதல் இங்கு வசித்து வருகிறோம். நள்ளிரவு 1 மணியளவில் குடியிருப்பில் 6 ஆவது மாடி மேல் இருந்து கட்டங்கள் குலுங்கியது போல தெரிந்தது. பின்பு, அனைத்து வீடுகளும் குலுங்கியதால் வெளியே வந்தோம்" என்றார்.
மேலும், கொரட்டூரில் வேறு இடங்களில் இது போல நடந்ததா என விசாரித்து பார்த்த போது, நில அதிர்வு வேறு இடங்களில் நடக்கவில்லை என தெரிந்தது" எனவும் கூறினார்.
இது நிலநடுக்கம் என்றால் கூட, சரியானதும் நாங்கள் தைரியமாய் உள்ளே சென்று விடுவோம். ஆனால், இது என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. வல்லுநர்கள் வந்து உரிய விளக்கம் அளித்தால் தான் முழுமையாக தெரியும் என்று குடியிருப்பு வாசிகள் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |