புதிய காதலனை தேடிக்கொண்ட இளம்பெண்: முன்னாள் காதலன் செய்த பயங்கரச் செயல்...
பிரேசில் நாட்டில், வீடு ஒன்றில் இளம்பெண் ஒருவரும் அவரது மகளும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டில் கேட்ட சத்தம்
பிரேசில் நாட்டில் வீடு ஒன்றிலிருந்து ஏதோ அசாதாரண சத்தம் கேட்பதைக் கவனித்த மக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
பொலிசார் அங்கு சென்றபோது, Edineuza Carvalho Rodrigues (24) என்ற இளம்பெண்ணும் Lívia Thauane (7) என்னும் அவரது மகளும் படுக்கையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
Image: Arte g1
என்ன காரணம்?
Edineuza ஒரு நபரைக் காதலித்து அவருடன் வாழ்க்கை நடத்திவந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் Lívia. ஆனால், ஓராண்டிற்கு முன் இருவரும் பிரிந்துவிட்டிருக்கிறார்கள். அதற்குப் பின் மீண்டும் இருவருக்கும் இடையில் உறவு ஏற்பட்டதாகவும், இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், Edineuza மற்றொரு ஆணுடன் பழகத் துவங்கியுள்ளார். அதை அறிந்த அவரது முன்னாள் காதலர் ஆத்திரத்தில் Edineuzaவையும் குழந்தையையும் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிசார் இந்த இரட்டைக் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
Image: Arte g1