செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக வழக்கு
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் செந்தில்பாலாஜி.
இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவருக்கு தற்போது அறுவை சிகிச்சை நடந்து முடிந்து, உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இவர் வசம் இருந்த துறைகள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு மாற்றம் செய்து கொடுக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தனன் தாக்கல் செய்த மனுவில், செந்தில் பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன, இலாகா இல்லாத அமைச்சராக அவர் நீடிப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகும்.
மேலும் நீதிமன்ற காவலில் இருக்கும் போது ரகசிய கோப்புகளை அணுகவதும் சுலபமாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |