ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு கொல்லப்பட்ட 1000க்கு மேற்பட்ட மக்கள்: ஐ.நா தகவல்
தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் ஆப்கானிஸ்தான் சென்றதில் இருந்து இதுவரை 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் தகவல் தெரிவித்துள்ளது.
1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பொதுமக்கள் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட போர் மற்றும் ஆயுத மோதல்களுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்புகள் குறைந்து இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
AFP/Getty
இது தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு(UNAMA) வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை பொதுமக்கள் சுமார் 1095 பேர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டு இருப்பதாகவும் 2,679 பேர் தாக்குதலில் படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கிட்டத்தட்ட 700 பேர் வரை மசூதிகள், கல்வி நிலையங்கள் மற்றும் மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாரி தாக்குதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களால் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AP Photo
இதில் மேலும் பெரும்பாலான தாக்குதலுக்கு தாலிபான்களே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட நிதி
இதற்கிடையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு, ஆப்கானிஸ்தானின் மேம்பாட்டிற்கு வழங்கப்பட்ட நன்கொடையாளர்கள் நிதி பெரும் அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் தாலிபான் அரசாங்கம் சர்வதேச அரங்கில் மருத்துவ நிதி மற்றும் உளவியல் ஆதரவை பெற கடுமையாக போராடி வருகின்றனர்.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |