புற்றுநோயால் அவதிப்படும் என் சகோதரிக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்: இந்திய வேகப்பந்துவீச்சாளர் உருக்கம்
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் வெற்றியை தனது சகோதரிக்கு சமர்ப்பிப்பதாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் தீப் அபாரம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியா 336 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் (Akash Deep) முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸிலும் துல்லியமாக பந்துவீசி டக்கெட், ஓலி போப், ஜோ ரூட் ஆகியோரை கிளீன்போல்டாக்கினார்.
அவதிப்படும் சகோதரி
மேலும் ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கார்ஸ் ஆகியோரையும் வெளியேற்றி மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 10 விக்கெட்டுகளை இந்த டெஸ்டில் கைப்பற்றினார்.
போட்டிக்கு பின்னர் பேசிய ஆகாஷ் தீப், "எனது சகோதரி கடந்த 2 மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.
என் ஆட்டத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்திருப்பார். இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்" என உருக்கத்துடன் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |