ஊழலை ஒழிக்க உலகின் முதல் ஏஐ அமைச்சரை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு
AI என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது அரசாங்கத்திலும் AI கால்பதித்துள்ளது.
உலகின் முதல் AI அமைச்சர்
உலகின் முதல் AI யால் உருவாக்கப்பட்ட அமைச்சரை அல்பேனியா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
டியெல்லா(Diella) என இந்த AI பெயரிடப்பட்டுள்ளது. (அல்பேனிய மொழியில் இதற்கு சூரியன் என்று பெயர்).
மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் தொடர்ச்சியாக 4வது முறையாக வெற்றி பெற்ற அல்பேனியா பிரதமர் எடி ராமா, நேற்றைய சோசலிஸ்ட் கட்சி கூட்டத்தில் இந்த AI அமைச்சருக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
பொது டெண்டர்கள் தொடர்பான அனைத்து முடிவுகளும் ஏஐ அமைச்சரான டியெல்லா நிர்வகிக்கும்.
100 சதவீதம் ஊழல் இல்லாமல், டெண்டருக்கு சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு பொது நிதியும் முற்றிலும் வெளிப்படையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டியெல்லா இதுவரை 36,600 டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சுமார் 1,000 சேவைகளை வழங்கியுள்ளது.
ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட டியெல்லா, பாரம்பரிய அல்பேனிய உடை அணிந்த பெண்ணை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அல்பேனியாவில் ஊழல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த AI அமைச்சர் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் என அரசு நம்புகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |