ஆல்பர்ட்டாவில் பற்றி எரியும் காட்டுத் தீ - 3,50,000 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சாம்பல்
அமெரிக்காவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காட்டுத் தீ மளமளவென பரவி வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஆல்பர்ட்டா மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ
ஆல்பர்ட்டா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீ பரவியதையடுத்து அந்நாட்டு அரசு அவசர கால நிலையை அறிவித்துள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்த காட்டுத் தீயால், கிட்டத்தட்ட 25,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
@BruceMa59173547
அந்நாட்டு அரசு காட்டுத் தீ மளமளவென பரவி வருவதால், எட்சன் நகரத்தில் வசித்து வரும் 8,000 க்கும் அதிகமான மக்களை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது. இந்த காட்டுத் தீயில், ஆல்பர்ட்டாவில் ஜனவரி 1 முதல் இப்போது 3,50,000 ஹெக்டேர்க்கு மேல் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
மேலும், அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினரும், பொலிசாரும் திணறி வருகின்றனர். மேலும், இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்த கியூபெக்கிலிருந்து 79 தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
@LBCI_News_EN
மாகாணத் தலைநகர் எட்மண்டனுக்கு மேற்கே 140 கிமீ (87 மைல்) தொலைவில் உள்ள டிரேட்டன் பள்ளத்தாக்கு மற்றும் நகருக்கு வடக்கே சுமார் 550 கிமீ தொலைவில் உள்ள ஃபாக்ஸ் லேக், 20 வீடுகள் தீயில் கருகியுள்ளன. 1,000க்கும் மேற்பட்ட மக்கள் எட்மண்டன் எக்ஸ்போ சென்டரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
@wxcentre
Tens of thousands of people have been forced to evacuate their homes as Alberta declares a state of emergency as wildfires continue to rage across Canada. pic.twitter.com/JMXNfLiMMf
— Alberto Whitney (@albahitney) May 7, 2023