தப்பிக்க இயலாத உலகின் பயங்கர சிறையில் ஆவிகளைத் தெடிச் சென்ற இளைஞர்கள்: ஒரு திகில் வீடியோ
தப்பிக்க இயலாத சிறை என வர்ணிக்கப்படும் பயங்கர சிறை ஒன்றில் ஆவிகளைத் தேடிச் சென்ற இளைஞர்கள் இருவர், அங்கு தாங்கள் சந்தித்த காட்சிகளை வெளியிட்டுள்ளார்கள்.
தப்பிக்க இயலாத ஒரு பயங்கர சிறை
Alcatraz என்பது உலகின் பயங்கர குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த ஒரு சிறை அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். காவலர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்ததாலும், தீவில் இருந்ததாலும் அதிலிருந்து யாரும் தப்ப இயலாது என்ற சிறப்பைப் பெற்றது அந்த சிறை.
Credit: Youtube / Watcher
உலகின் பயங்கர சிறையில் ஆவிகள்
தற்போது அந்த சிறையில் குற்றவாளிகள் யாரும் இல்லை. அது இப்போது ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது.
அந்த சிறையில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, Shane Madej மற்றும் Ryan Bergara என்னும் ஆவிகளுடன் தொடர்புகொள்ளும் இருவர் அந்த சிறைக்குச் சென்றுள்ளார்கள்.
Credit: Youtube / Watcher
இரவு நேரத்தில் ஆவிகளின் சத்தங்களை பதிவு செய்யும் கருவிகளுடன் அந்த சிறை அறைகளுக்குச் சென்ற இருவரும், எங்களுடன் பேச விரும்பும் யாராவது இங்கு இருக்கிறீர்களா என கேட்க, சிறையிலிருந்து வரும் பதில் திகிலடைய வைக்கிறது.
உங்களுக்கு நேரம் கிடைக்குமானால், அந்த காட்சிகளை இங்கு வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.