விதவிதமாய்... வித்தியாசமாய்... மோடிக்கு பைடன் கொடுத்த விருந்தில் இடம் பிடித்த உணவு வகை பட்டியல்!
இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் கொடுத்த விருந்தில் இடம் பிடித்த உணவு வகை பட்டியல்கள் வெளியாகி உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர் மோடி - ஜனாதிபதி ஜோ பைடன் சந்திப்பு
அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
இன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். அப்போது, ஜனாதிபதி பைடன் பிரதமர் மோடி கட்டியணைத்து கையைப் பிடித்தவாறே உற்சாகமாக பேசினார்.
இந்தச் சந்திப்பில் பிரதமர் மோடி ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சந்தனப் பெட்டி ஒன்றையும், ஜில் பைடனுக்கு வைரக்கல்லான விநாயகர் சிலையை பரிசு கொடுத்தார்.
பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு 20ம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட புத்தகத்தையும், பழமை வாய்ந்த அமெரிக்க புகைப்பட கருவியையும் பரிசளித்தார்.
வெளியான விருந்து உணவுப் பட்டியல்
வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்து கொடுத்தனர்.
தற்போது அந்த விருந்தின் உணவு வகை பட்டியல் வெளியாகி உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விருந்தில் அளிக்கப்பட்ட உணவு வகைகள்
குங்குமப்பூ சேர்க்கப்பட்ட பாலேட்டு ரிஸோட்டோ
சுமாக் கலந்த வறுக்கப்பட்ட கடல் பாஸ்
அழுத்தப்பட்ட தர்பூசணி
இனிப்பு கலந்த வெண்ணெய்பழ சாஸ்
லெமன்-டில் தயிர் சாஸ்
உப்பு நீரில் பதப்படுத்தப்பட்ட தினை
வறுக்கப்பட்ட சோளவிதை சாலட்
ஸ்டஃப்ட் போர்டோபெல்லோ காளான்
மிருதுவாக்கப்பட்ட தினை கேக்
கோடைக்கால குளிர்பானம்
இந்த விதவிதமான உணவுகளையெல்லாம் சமையல் கலைஞர்கள் நினா கர்டிஸ் மற்றும் க்ரிஸ் கோமெர்ஃபோர்ட், சுஸி மாரிஸன் ஆகியோர் தயாரித்துள்ளனர். மோடி சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவார் என்பதற்காக, சைவ உணவுகளை நினா கர்டிஸ் தயாரித்துள்ளார்.
Bidens to host PM Modi for state dinner: Millet cakes, stuffed mushrooms, grilled corn salad on the menuhttps://t.co/PqTxHkAA09 via @businesstoday
— Amit Paranjape (@aparanjape) June 22, 2023
"FLOTUS Jill Biden, keeping in mind PM Modi’s vegetarian food preferences, asked Chef Nina Curtis, an expert in plant-based… pic.twitter.com/8FFB5maga5
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |