இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் - ஒரு போட்டிக்கு இத்தனை கோடியா?
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்ஸி ஸ்பான்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சர்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் Dream11 நிறுவனம் இருந்து வந்தது.
சமீபத்தில், Promotion & Regulation of Online Gaming Bill 2025 என்ற ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா இந்தியா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இது, பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதால், Dream11 நிறுவனம் இந்த தடையின் கீழ் வந்தது.
இதன் காரணமாக, இந்திய ஜெர்ஸியை ஸ்பான்சரில் இருந்து Dream11 நிறுவனம் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, ஆசிய கோப்பையில் இந்திய அணி ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர் இல்லாமல் விளையாடி வருகிறது.
அப்போலோ டயர்ஸ்
இதனையடுத்து, புதிய ஸ்பான்சரை பிசிசிஐ தேடி வந்தது. இதற்கான ஏலத்தில், apollo tyres, Canva, Jk tyres ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டது.
இந்நிலையில், டயர் தயாரிப்பு நிறுவனமான அப்போலோ டயர்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு தொடரும் என்றும், இந்த காலத்தில் இந்திய அணி 121 இருதரப்பு போட்டிகள் மற்றும் 21 சர்வதேச போட்டிகளில் விளையாடும் என்றும் கூறப்படுகிறது.
இதில் போட்டிக்கு ரூ.4.5 கோடி வீதம், மொத்தம் ரூ.579 கோடிக்கு இந்த ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றியுள்ளது.
முந்தையை ஸ்பான்சரான dream11 ஒரு போட்டிக்கு ரூ.4 கோடி செலுத்தி வந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |