மெக்சிகோ சிறைச்சாலை மீது ஆயுதமேந்திய குழு தாக்குதல்: கைதிகள் தப்பியோட்டம்!
மெக்சிகோவின் எல்லை நகரமான ஜுவாரெஸில் உள்ள சிறைச்சாலையில் ஆயுதமேந்திய குழு ஒன்று தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் தூப்பாக்கி சூடு
ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோவின் வடக்கு எல்லை நகரமான ஜுவாரெஸில்(Juarez) உள்ள சிறைச்சாலையில் ஆயுதமேந்திய குழு ஒன்று திடீரென தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறைச்சாலையின் மீதான தாக்குதலில் 14 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், இதில் 10 பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நான்கு கைதிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
REUTERS
மேலும் இந்த தாக்குதலில் 13 பேர் வரை காயமடைந்ததாகவும், குறைந்தது 24 பேர் தப்பியோடியதாகவும் சிவாவா(Chihuahua) மாநில வழக்கறிஞர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் கவச வாகனங்களில் சிறைச்சாலைக்கு நுழைந்த தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியதாக ஆரம்ப விசாரணையில் கண்டறிந்ததாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
REUTERS
மேலும் இரண்டு இடங்களில் தாக்குதல்
ஜுவாரெஸில் உள்ள சிறைச்சாலையில் நடந்த தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக நகராட்சி போலீசாருக்கு எதிராக நடந்த தாக்குதல் குறித்து அதிகாரிகள் புகார் வழங்கப்பட்டது, பின் தாக்குதல் நடத்தியவர்களை துரத்தி சென்றதில் நான்கு பேர் பிடிப்பட்டனர், மேலும் லொறி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் நகரின் மற்றொரு பகுதியில் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று அதிகாரிகளுக்கு அழைப்பு வந்ததை தொடர்ந்து, அந்த சம்பவத்தில் மேலும் இருவர் இறந்தனர்.
REUTERS
இதற்கிடையில் மூன்று சம்பவங்களும் தொடர்புடையதா என்பதை அரசு வழக்கறிஞர் குறிப்பிடவில்லை.
ஆகஸ்டில் ஜுவாரெஸில் இரண்டு போட்டி கார்டெல்களின் உறுப்பினர்களுக்கு இடையே ஒரு சிறைச்சாலையில் மோதல் ஏற்பட்டது, அப்போது வெடித்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் 11 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.