ஜோ பைடன் குறித்து கணித்த ஜோதிடர்... அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பெயரை வெளியிட்டார்
ஜோ பைடன் தேர்தல் களத்தில் இருந்து வெளியேறும் நாளை கணித்து வெளியிட்ட ஜோதிடர் ஒருவர், தற்போது அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி
இணையத்தின் மிகவும் பிரபலமான ஜோதிடர் என அறியப்படும் Amy Tripp என்பவரே, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்புக்கு அதிக வாய்ப்பிருப்பதாக கணித்துள்ளார்.
தொழில் ரீதியாக வெற்றிகளின் உச்சத்தில் இருக்கும் டொனால்டு ட்ரம்ப், தேர்தல் களத்திலும் அதே வெற்றியை உறுதி செய்வார் என்றே Amy Tripp கணித்துள்ளார். மட்டுமின்றி, சமீபத்தில் அவர் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவமும் அவரது வெற்றிக்கான ஒரு அடையாளமாகவே Amy Tripp குறிப்பிடுகிறார்.
ஜூலை 11ம் திகதி தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட Amy Tripp, ஜோ பைடன் தேர்தல் களத்தில் இருந்து விலகுவார். பல காரணங்களில், வயது மூப்பும் ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் பலர் உறுதியான திகதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஜூலை 21 என அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஜோ பைடன் வயதை குறிப்பிட்டு, கமலா ஹாரிஸ் தேர்தல் களம் காண வாய்ப்புள்ளதாகவும், கட்சி அவருக்கு சாதகமான முடிவெடுக்கும் என்றும் தமது கணிப்பை அப்போதே வெளியிட்டிருந்தார்.
அமெரிக்காவுக்கு ஆபத்து
மேலும், எதிர்வரும் நாட்களில் ஜோ பைடன் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் Amy Tripp கணித்துள்ளார். ஆகஸ்டு மாதம் அமெரிக்காவுக்கு ஆபத்து காத்திருப்பதாக கணித்துள்ள அவர், அரசியல் ரீதியான தடுமாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றார்.
ஆகஸ்டு 19ம் திகதி ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு துவங்க இருக்கிறது. அந்த மாநாட்டில் தான் தங்களின் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க உள்ளனர்.
ஆனால் Amy Tripp வெளியிட்டுள்ள கணிப்புகள் இவ்வாறிருக்க, சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கமலா ஹாரிஸ் ஆதரவு நிலையை வெளிப்படுத்தியுள்ளன.
டொனால்டு ட்ரம்பின் நிலை நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வருவதுடன், கமலா ஹாரிஸை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் குடியரசுக் கட்சி குழப்பத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |