பெண்கள் உலகக் கோப்பைக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு... இளைஞரின் வெறிச்செயல்: நடுங்கவைக்கும் சம்பவம்
நியூசிலாந்தில் பெண்கள் உலகக் கோப்பை அணி தங்கியிருக்கும் ஹொட்டலுக்கு அருகில் உள்ள கட்டுமான தளத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை
இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ஆக்லாந்தில் ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை துவங்கவிருக்கும் சில மணி நேரம் முன்னர் இந்த கொலைவெறித் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
@getty
உள்ளூர் நேரப்படி 7.22 மணிக்கு நடந்த இந்த தாக்குதலை அடுத்து, பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவிக்கையில், இந்தத் தாக்குதலை பயங்கரவாதச் செயலாகப் பார்க்க முடியாது என்றார்.
மேலும், திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல்தாரிக்கு 24 வயதிருக்கலாம் என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடந்த கட்டுமான தளத்தில் சம்பவத்தின் போது 180 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்களில் எவரேனும் காயம்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவில்லை.
ஆயுததாரி இளைஞரும்
தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஆயுததாரிகளான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொலிசாரின் பதில் தாக்குதலில் ஆயுததாரி இளைஞரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@AP
வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அந்த இளைஞர், கட்டுமான பணியிடத்தில் பணியாற்றும் வாய்ப்பும் அளிக்கப்பட்டிருந்ததாக கூறுகின்றனர்.
மேலும், தாக்குதல்தாரி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது பொலிஸ் தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே கூறுகின்றனர்.