ஆக்லாந்து தாக்குதல்தாரியின் அடையாளம் தெரிந்தது: கண்காணிப்பில் இருந்தவர் என்பதும் அம்பலம்
நியூசிலாந்தில் கட்டுமான பணியிடத்தில் புகுந்து துப்பாக்கியால் தாக்குதலில் ஈடுபட்டு, இருவர் கொல்லப்பட காரணமான இளைஞரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த இளைஞரின் பின்னணி
ஆக்லாந்தில் துப்பாக்கியால் தாக்குதலில் ஈடுபட்ட அந்த 24 வயது இளைஞரின் பெயர் Matu Tangi Matua Reid என அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது. குடும்ப வன்முறை, உளவியல் பாதிப்பு, பொலிஸ் கண்காணிப்பு மற்றும் வீட்டுக்காவல் என அந்த இளைஞரின் பின்னணி தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் இருவர் கொல்லப்பட்டதுடன், பொலிஸ் அதிகாரி உட்பட ஆறு பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதனிடையே, பொலிசார் முன்னெடுத்த நடவடிக்கையில் அந்த இளைஞரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் பெறாத அந்த இளைஞர் ஏற்கனவே குடும்ப வன்முறை தொடர்பில் பொலிசாரின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட கட்டுமான தளத்திற்கு செல்லும் முன்னர், பகல் 7.20 மணியளவில் பலமுறை துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.
@dailymail
5 மாத வீட்டுக்காவலில்
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற ஆயுததாரிகளான பொலிசார், சுமார் 8 மணியளவில் தாக்குதல்தாரிக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர். ஆக்லாந்து மாவட்ட காவல்துறை தலைவர் சன்னி பட்டேல் தெரிவிக்கையில், கட்டுமான தளத்தில் மேல் நோக்கி சென்ற அந்த இளைஞன் பொலிசார் மீது துப்பாக்கியால் சுட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
@nzherald
இந்த நிலையில், தாக்குதாரி உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், சுமார் 10 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவம் நடக்கும் போது, அந்த இளைஞர் குடும்ப வன்முறை தொடர்பில் 5 மாத வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
மேலும், அந்த இளைஞருக்கு துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் இல்லை என்பதையும் பொலிசார் உறுதி செய்துள்ளனர். தாக்குதல் முன்னெடுப்பதற்கான பின்னனி காரணம் வெளியாகவில்லை எனவும், ஆனால் உளவியல் பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
@breakfast
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |