பாகிஸ்தான் பனிச்சரிவில் 10 பேர் உயிரிழப்பு: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்வைக்கும் காரணம்
பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பனிச்சரிவு
சனிக்கிழமை பாகிஸ்தானில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தான்(Gilgit-Baltistan) பகுதியை திடீரென மிகப்பெரிய பனிச்சரிவு தாக்கியது, இதில் 10 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர், மேலும் 25 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
அஸ்டோர் மாவட்டத்தின் ஷண்டர் டாப் மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்த பேரழிவில் கொல்லப்பட்ட 10 பேரில் 3 பெண்களும் உள்ளடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
???10 people have been killed and 25 injured in an avalanche in Astoor district of Gilgit-Bulistan, northern Pakistan
— ?World News 24 ??? (@DailyWorld24) May 27, 2023
According to SP Astor, the incident took place in the area of Shuter.
Police say that after the incident, emergency has been imposed in the hospitals of Gilgit… pic.twitter.com/NquhLx1Ord
இதையடுத்து உள்ளூர் மக்கள் உதவியுடன் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பருவநிலை மாறுபாடு காரணம்
இந்த பனிச்சரிவு விபத்தை தொடர்ந்து கில்கிட்-பால்டிஸ்தான் பகுதி முதலமைச்சர் காலித் குர்ஷித் கான், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார், அத்துடன் உள்ளூர் அதிகாரிகளுக்கு மீட்பு பணிகளுக்கான உத்தரவை முடுக்கி விட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பதிவிட்டுள்ள ட்வீட்டில், பனிச்சரிவில் இறந்தவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார், அத்துடன் பருவநிலை மாறுபாட்டால் பாகிஸ்தானில்இ து போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.