பாபா வங்காவின் கணிப்பு மீண்டும் பலித்தது! பீதியடையும் உலக நாடுகள்
பல்கேரிய தீர்க்க தரிசியான பாபா வங்காவின் மீண்டும் நிஜமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாபா வங்கா கணிப்பு
பால்கனின் நாஸ்ட்ரடாமஸ் என்று குறிப்பிடப்படும் பாபா வங்கா பல கணித்த பல்வேறு கணிப்புகள் பலித்ததால் மக்கள் அதை நம்பி வருகின்றனர்.
1996 -ம் ஆண்டு காலமான பலகேரிய ஜோதிடரான பாபா வங்காவின் கணிப்புகள் பல்வேறு நபர்களுக்கு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளது.
அவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரின் உயிருக்கு ஆபத்து என்று கணித்திருந்தார்.
அதாவது, ட்ரம்ப் ஒரு மர்மமான நோயை எதிர்கொள்வார் என்றும் அது அவரை காது கேளாதவராகவும், மூளைக் கட்டியால் பாதிக்கப்படுவார் என்றும் கணித்திருந்தார்.
இந்நிலையில், பாபா வங்காவின் கணிப்பு முழுவதுமாக பலிக்கவில்லை என்றாலும் சமீபத்திய ட்ரம்பின் கொலை முயற்சி அதனை உண்மையாகும் விதத்தில் உள்ளது.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் பிரச்சார கூட்டத்த்தில் பேசிக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அவரது வலது காதின் மேல் பகுதியை துளைத்தபடி குண்டு சென்றதில் ரத்தம் சொட்டியபடி அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதில், பாபா வங்கா கணித்தபடியே 2024 -ம் ஆண்டில் ட்ரம்பின் காதுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், இவரது மற்ற கணிப்புகளும் பலித்து விடுமோ என்று உலக தலைவர்கள் பீதியில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |