நான் இறக்கப் போவது இல்லை தோழர்களே! அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்த புடினின் நெருங்கிய கூட்டாளி
பெராலஸ் நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ மீண்டும் பொதுவெளியில் தோன்றி அவரது உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உடல்நிலை குறித்து பரவிய வதந்தி
1994ம் ஆண்டு முதல் பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியாக அலெக்சாண்டர் லுகாஷென்கோ(Alexander Lukashenk) ஆட்சி நடத்தி வரும் நிலையில், இவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பர் மற்றும் நம்பதகுந்த கூட்டாளியாக ஆரம்பம் முதலே திகழ்ந்து வருகிறார்.
உக்ரைன் மீது போர் தாக்குதலை ரஷ்யா அறிவிக்கும் போதும் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு உறுதுணையாக நின்றார், அத்துடன் ரஷ்ய வீரர்கள் பெலாரஸ் நாட்டின் நிலப்பரப்பில் இருந்து தாக்குதல் நடத்தவும் அனுமதி கொடுத்தார்.
http://en.kremlin.ru/ Creative Commons BY
இந்நிலையில் சமீபத்தில் (மே 9ம் திகதி) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றி விழா அணிவகுப்பில் நேரடியாக கலந்து கொண்ட ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ சற்று சோர்வாகவும், மிகவும் நிலையற்றதாகவும் காணப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டதாகவும், எதிரிகள் அவருக்கு எதிராக ஏதோ சதி செய்து விட்டதாகவும், மேலும் அவர் உயிருக்கு போராடி வருவதாகவும் வதந்திகள் பரவத் தொடங்கின.
அதற்கு ஏற்றவாறு பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ-வும் சிறிது நாட்கள் பொதுவெளியில் தோன்றாமல் தலைமறைவாக காணப்பட்டார்.
SkyNews
நான் இறக்கப் போவது இல்லை தோழர்களே!
ஆனால் தற்போது ஜனாதிபதி லுகாஷென்கோ மீண்டும் பொதுவெளியில் தோன்றி அவரின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அரசு செய்தி கூடகத்தில் வெளியான வீடியோவில், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அதிகாரிகளிடம் “நான் இறக்கப் போவது இல்லை நண்பர்களே” என்று தெரிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
Reuters
மேலும் கூட்டம் ஒன்றில், தான் அடினோ வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், பொதுவாக இவை மூன்று நாட்களில் சரியாகி விடும் நிலையில், உடனடியாக ஓய்வு எடுக்க முடியாத அளவிற்கு வேலை பளு இருந்ததாக லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் “நான் இறக்கப் போவது இல்லை தோழர்களே” என்று தெரிவித்த லுகாஷென்கோ, நீங்கள் இன்னும் என்னுடன் நீண்ட காலம் போராட வேண்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.