பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் மற்றுமொரு ஐரோப்பிய நாடு - இஸ்ரேல் மீது 12 தடை
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க போவதாக மற்றுமொரு ஐரோப்பிய நாடு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பெல்ஜியம்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க போவதாக கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அறிவித்தார்.
செப்டம்பர் 22 ஆம் திகதி, பாலஸ்தீன அங்கீகாரம் குறித்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்கூட்டத்தை பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா இணைந்து நடத்துகிறது.
இந்த கூட்டத்தின் போது, நிபந்தனைகளுடன் பாலஸ்தீனத்தை அரசாக அங்கீகரிக்க அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், பெல்ஜியமும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க உள்ளதாக பெல்ஜியம் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான மாக்சிம் பிரீவோட் அறிவித்துள்ளார்.
🇧🇪🇵🇸🚨 Palestina zal door België worden erkend tijdens de Algemene Vergadering van de VN! En er worden stevige sancties genomen ten aanzien van de Israëlische regering. Elk antisemitisme of verheerlijking van terrorisme door aanhangers van Hamas zal eveneens krachtiger worden…
— Maxime PREVOT (@prevotmaxime) September 2, 2025
மேலும், இஸ்ரேலிய நிறுவனங்களுடன் பொதுகொள்முதல் கொள்கைகளை மறு ஆய்வு செய்தல், சாத்தியமான நீதித்துறை வழக்குகள், 2 இஸ்ரேலிய அமைச்சர்கள் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு பெல்ஜியமில் persona non grata உள்ளிட்ட 12 உறுதியான தடைகள் இஸ்ரேல் மீது விதிகப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், காசாவில் பிடித்துவைக்கப்பட்டுள்ள கடைசி இஸ்ரேல் பணயக்கைதி விடுவிக்கப்பட்ட பின்னர், பாலஸ்தீனத்தை நிர்வகிப்பதில் ஹமாஸ் அமைப்பிற்கு எந்த பங்கும் இல்லை. பாலஸ்தீன அங்கீகாரம் நிர்வாக ரீதியில் முறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |