1 கிலோ வெண்டைக்காய் ரூ.7200., அமெரிக்காவில் இந்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவில் வெண்டைக்காயின் விற்பனை விலை அங்குள்ள இந்தியரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெண்டைக்காயின் விலையால் அதிர்ந்த இந்திய இளைஞர்
அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குள் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த வெண்டைக்காய் சிப்ஸ் பாக்கெட்டின் விலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
வெறும் 85 கிராம் எடை கொண்ட அந்த வெண்டைக்காய் சிப்ஸ் பாக்கெட்டின் விலை $6.50 அமெரிக்க டொலர்(இந்திய ரூபாய் மதிப்பில் 600) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெண்டைக்காய் இவ்வளவு மதிப்பு கொண்டது என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார், வெண்டைக்காய்-க்கு பெர்சனாலிட்டி டேக்ஸ்(Personality Tax) வசூலிக்கப்படுகிறது என கிண்டலாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வெண்டைக்காயின் விலை
இந்த அதிகப்படியான விலையை கண்ட பிறகு, அமெரிக்காவில் வெண்டைக்காயின் விலை குறித்து தேடியுள்ளார். அப்போது தான் அமெரிக்காவில் வெண்டைக்காய் ஒரு கிலோவின் விலை சுமார் ரூ. 7200 என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதை கண்டு திகைத்துப் போனார்.
இந்தியாவில் தினசரி உணவில் இடம்பெறும் வெண்டைக்காயின் விலை அமெரிக்காவில் விலையுயர்ந்த ஒன்றாக மாறி இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் வெண்டைக்காயின் இந்த அதிகப்படியான விலைக்கு முக்கிய காரணம், அமெரிக்காவில் வெண்டைக்காய் ஒரு குறிப்பிட்ட இறக்குமதி செய்யப்பட்ட பொருள் ஆகும்.
இந்திய காய்கறிகளின் இறக்குமதி செலவு, போக்குவரத்து, சுத்திகரிப்பு போன்ற காரணங்களால் இதன் விலை இவ்வளவு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |