ஜோ பைடன் மீது பாலியல் குற்றம்சாட்டிய பெண்; குடியுரிமை கேட்டு ரஷ்யாவில் அடைக்கலம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய பெண், இப்போது ரஷ்யாவில் இருக்கிறார்.
2020-ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜோ பைடனை (Joe Biden) பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய முன்னாள் செனட் ஊழியர் தாரா ரீட் (Tara Reade), இப்போது ரஷ்யாவில் இருந்துகொண்டு, அங்கு குடியுரிமை பெற திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மாஸ்கோவில் ஸ்புட்னிக் என்ற அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனத்துடன் செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பில் ரீட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Tara Reade/Getty Images
அவருடன் அமெரிக்காவில் தண்டிக்கப்பட்ட மரியா புடினா (Maria Butina) என்ற ரஷ்ய பெண்மணியும் இணைந்தார். 2018-ஆம் ஆண்டில் அமெரிக்காவால் சிறையில் அடைக்கப்பட்ட, ஆனால் இப்போது ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள புடினா தன்னை வரவேற்றதாக ரீட் கூறினார்.
ரஷ்யாவில் பாதுகாப்பாக உணர்வதாக கூறும் ரீட், ரஷ்யா ஜனதிபதி விளாடிமிர் புட்டின் தனக்கு ரஷ்ய குடியுரிமை வழங்குவார் என நம்புவதாக கூறுகிறார்.
MK
1993-ஆம் ஆண்டு காங்கிரசில் பைடெனிடம் பணிபுரிந்தபோது தன்னை பாலியல் பலாத்காரம் செய்யா முயன்றதாகக் கூறிய பின்னர் அமெரிக்காவில் கடுமையான துன்புறுத்தலை எதிர்கொள்வதாக அவர் கூறினார்.
அதேசமயம் தனது அமெரிக்க குடியுரிமையை தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாக கூறிய ரீட், அமெரிக்காவில் உள்ள பல்வேறு பிரச்சனைகள், அதன் உள்கட்டமைப்பு, அரசியல், ஊடகத் துறை மற்றும் உக்ரைன் போரில் வாஷிங்டனின் நிலைப்பாடு ஆகியவற்றை விமர்சித்தார்.
Joe Biden, Vladimir Putin, USA, Russia, Citizenchip