சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ - எதிர்க்கட்சிகள் அமளி
திரிபுரா மாநில சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த சட்டமன்ற உறுப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர்.
ஆபாச படம் பார்த்த எம்.எல்.ஏ
திரிபுரா சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ ஆபாச படம் பார்த்த புகாரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
திரிபுரா சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் பாஜக எம்எல்ஏ ஜாதவ் லாக் நாத் ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது சட்டப்பேரவை தொடங்கிய நாளிலே திப்ரா மோதா கட்சியைச் சேர்ந்த அனிமேஸ் தேப்பர்மா இது குறித்து கேள்வியை எழுப்பினார்.
The Hindu
ஆனால், சபாநாயகர் இதை பற்றி பேச அனுமதியை மறுத்துவிட்டார். இதை தவிர நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதை பற்றி பேசுங்கள் என்று அனைவரும் இருக்கையில் அமருங்கள் எனக் கூறினார்.
எதிர்க்கட்சிகள் அமளி
பாஜக எம்.எல்.ஏ ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் திப்ரா மோதா கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாயாகர் இருக்கை அருகே, பாஜகவிற்கும் எதிர்கட்சிக்கும் இடையே வந்த மோதலால் கடும் அமளி ஏற்பட்டது.
பின்பு, திப்ரா மோதா கட்சியைச் சேர்ந்தவர்கள் சட்டப்பேரவையின் மேஜை மீது ஏறி மனித சங்கிலி போல நின்று கோஷங்களை எழுப்பினர்.
Manorama
இதனால், திப்ரா மோதா கட்சியின் உறுப்பினர்கள் 5 பேரை சபாநாயகர் இடைநீக்கம் செய்தார். இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இது திரிபுரா அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |