இத்தாலி ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: 2 உளவுத் துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் பலி
இத்தாலிய உளவுத் துறையில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் உட்பட நான்கு பேர் மேகியோர் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
படகு கவிழ்ந்து விபத்து
இத்தாலியின் மிகப்பெரிய மேகியோர் ஏரியில்(Lake Maggiore) ஞாயிற்றுக்கிழமை மாலை சுற்றுலா படகு கவிழ்ந்ததில் இத்தாலிய உளவுத் துறையில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இத்தாலிய உளவுத் துறையில் எந்த பிரிவில் பணிபுரிகின்றனர் என்ற தகவல் வெளியாகவில்லை, ஆனால் அவர்கள் பெயர்கள் முறையே கிளாடியோ அலோன்சி(62) மற்றும் டிசியானா பர்னோபி(53) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
A boat carrying at least 20 tourists and crew members has overturned in a whirlwind on Italy's Lake Maggiore, killing four people.
— Sky News (@SkyNews) May 29, 2023
Police confirmed to Sky News that the victims are two Italians, one Israeli and one Russian.
Read more: https://t.co/VydGRcwvvy pic.twitter.com/4XzDx5v2gs
இவர்களுடன், இஸ்ரேல் பாதுகாப்பு சேவையில் பணிபுரிந்து ஓய்வுதியம் பெறும் நபர் மற்றும் சுற்றுலா படகின் கேப்டன் கோதுரியாவின் ரஷ்ய மனைவி அன்யா போஷ்கோவா(50) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 செ.மீ நீளம் கொண்ட படகில் 25 பயணிகள் வரை இருந்த நிலையில், எதிர்பாராத நேரத்தில் தாக்கிய அலைகள் காரணமாக படகு கழிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பயணிகள் தங்கள் நீச்சல் திறமையை கொண்டு, மீட்பு படகுகள் உதவி மூலமாகவும் பாதுகாப்பாக கரைக்கு வந்தடைந்தனர்.
EPA
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை
உயிரிழந்த இஸ்ரேல் நாட்டு நபரின் பெயர் வெளியிடப்படாத நிலையில், அவரது உடலை இஸ்ரேலுக்கு முறைப்படி கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் உயிரிழந்த இரண்டு இத்தாலிய உளவுத் துறை அதிகாரிகள் நண்பரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மேகியோர் ஏரிக்கு சென்றதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Vigili del Fuoco