பிலிப்பைன்சில் படகு கவிழ்ந்து விபத்து: 26 பேர் பலி
பிலிப்பைன்சில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் வரை பலியாகியுள்ளார்கள்.
டோக்சுரி புயல்
கடந்த சில நாட்களாக டோக்சுரி என்று பெயரிடப்பட்ட புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை துவம்சம் செய்த நிலையில், புயல் காரணமாக நேற்று Laguna de Bay என்னும் ஏரியில் பயணித்துக்கொண்டிருந்த படகு ஒன்று தண்ணீரில் கவிழ்ந்துள்ளது.
காற்றில் படகு நிலைதடுமாற, அதில் பயணித்தவர்கள் எல்லாரும் படகின் ஒரு பக்கத்துக்கு சென்றதையடுத்து படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
Photograph: Aaron Favila/AP
26 பேர் வரை பலி
தகவலறிந்து உடனடியாக பொலிசார் மீட்புக் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்கள். மீட்புக்குழுவினர் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 40 பேரை மீட்டுள்ளார்கள்.
என்றாலும், 26 பேர் வரை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார்கள். சொல்லப்போனால், எத்தனை பேர் அந்த படகில் பயணித்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
Pioneer Press
படகில் அதிகபட்சம் 42 பயணிகளை மட்டுமே ஏற்ற அனுமதி உள்ள நிலையில், அளவுக்கதிகமான பயணிகள் ஏற்றபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவர்களுக்கு லைஃப் ஜாக்கெட்களும் வழங்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |