ஒருவர் மீது சிறுநீர் கழிப்பதில் என்ன குற்றம் இருக்கிறது? பிரவேஷ் சுக்லாவுக்கு ஆதரவு
மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவுக்கு பிராமண மகாசபா ஆதரவு தெரிவித்துள்ளது.
பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்
மத்திய பிரதேசம் மாநிலம், சித்தி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மது போதையில் மனநலம் பாதித்த பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவன் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், சிறுநீர் கழித்து துன்புறுத்தப்பட்ட பழங்குடியின நபர் தஷ்மத் ராவத்தை, தனது வீட்டிற்கு வரவழைத்து பாதங்களை கழுவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டு கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்பு, முதலமைச்சரின் உத்தரவுப்படி பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது.
இதற்கிடையில், பர்வேஷ் ஷூக்லாவை விடுவித்து விடுங்கள், அவர் எங்களுடைய கிராமத்தின் பண்டிட் என பாதிக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த தஷ்மத் ராவத் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.
Flash:#MadhyaPradesh Chief Minister Shivraj Singh Chouhan meets Dashmat Rawat and washes his feet at CM House in #Bhopal.
— Yuvraj Singh Mann (@yuvnique) July 6, 2023
In a viral video from Sidhi, accused Pravesh Shukla was seen urinating on Rawat. pic.twitter.com/3ccvYnilbE
பாஜக பிரமுகருக்கு பிராமண மகாசபா ஆதரவு
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவுக்கு பிராமண மகாசபா ஆதரவு தெரிவித்துள்ளது.
ஒருவர் மீது சிறுநீர் கழிப்பதில் என்ன குற்றம் இருக்கிறது வேண்டும், எந்த சட்டத்தின் கீழ் இது குற்றச்செயல் என்றும் பிராமண மகாசபா குல்தீப் பரத்வாஜ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அவர் பாதிக்கப்பட்ட தஷ்மத் ராவத் சம்பவம் நடந்த போது போதையில் இருந்தார். பொது இடங்களில் மது அருந்துவது குற்றம் தான். அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யுங்கள் என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |