அவரை விடுவித்து விடுங்கள்! அவர் எங்கள் கிராமத்தின் பண்டிட்: சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட நபர் அரசிடம் வேண்டுகோள்
“என் மீது சிறுநீர் கழித்த நபரை விடுவித்து விடுங்கள், தன் தவறை அவர் உணர்ந்துவிட்டார்” என பாதிக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த தஷ்மத் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை உலுக்கிய சம்பவம்
மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த தஷ்மத் ராவத் என்ற நபர் மீது சித்தி தொகுதி பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பாதிக்கப்பட்ட பழங்குடியின நபரான தஷ்மத் ராவத்தை தமது வீட்டிற்கு வரவழைத்து, அவருடைய பாதங்களை கழுவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Madhya Pradesh CM @ChouhanShivraj apologies to Dasmat Rawat of #SidhiMP. #PraveshShukla the accused who had urinated on Rawat is in jail. By meeting Rawat in his official residence & washhing his feat as a mark of Penance, the MP CM has set a standard by reaching out to the… pic.twitter.com/xL7JSXNa4Y
— Pramod Kumar Singh (@SinghPramod2784) July 6, 2023
இதற்கிடையில் மதுபோதையில் பழங்குடியினர் மீது அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் பிரவேஷ் சுக்லாவின் வீட்டை முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் உத்தரவின் பேரில் அதிகாரிகள் புல்டோசரால் இடித்து தள்ளினர்.
அவரை விடுவித்து விடுங்கள்
இந்நிலையில் பர்வேஷ் ஷூக்லாவை விடுவித்து விடுங்கள், அவர் எங்களுடைய கிராமத்தின் பண்டிட் என பாதிக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த தஷ்மத் ராவத் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
अब इसे क्या कहेंगे, आदिवासी की उदारता या जाति व्यवस्था की जकड़न “ हमारे गाँव के पंडित है इसलिये प्रवेश शुक्ला को छोड़ दिया जाये” @ABPNews #PraveshShukla #SidhiUrineCase pic.twitter.com/KdkYfgR0gu
— Brajesh Rajput (@brajeshabpnews) July 8, 2023
இது தொடர்பாக அவர் முன்வைத்துள்ள கோரிக்கையில், தவறு நடந்துவிட்டது தான், பர்வேஷ் ஷூக்லா தன்னுடைய தவறை உணர்ந்துவிட்டார்.
அவர் எங்களுடைய கிராமத்தின் பண்டிட், எனவே அவரை விடுவிக்கக் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என பாதிக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த தஷ்மத் ராவத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |