பிரேசிலில் கொட்டி தீர்த்த கனமழை: வெள்ளம் மற்றும் நிலச்சரியில் சிக்கி 36 பேர் பலி
பிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் 36 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவு
பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாவ் பாலோ பகுதியில் ஒரே நாளில் 600 மிமீ மழை பெய்துள்ளது என்றும், இது பிரேசிலில் மிகக் குறுகிய காலத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவு என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
At least 36 people have been killed after heavy rain caused flooding and landslides in Brazil, authorities say.
— Sky News (@SkyNews) February 20, 2023
Get the latest here: https://t.co/BzslnRH5S0 pic.twitter.com/1bLpfVEahQ
அத்துடன் சாவ் பாலோவின் கடலோரப் பகுதியில் கனமழை தொடரும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றனர்.
கனமழையால் ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 50 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன, மேலும் 7 வயது சிறுமி உட்பட 36 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணி மாநில அரசால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Sky News
சாவ் பாலோ மாநிலத்தின் ஆறு நகரங்களுக்கு 180 நாள் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, திங்களன்று பார்வையிடுவார் என அவரது அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
Sky News