போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக பிரேசில் பொலிஸ் நடத்திய வேட்டை: கொல்லப்பட்ட 43 பேர்
போதைப் பொருள் கும்பலுக்கு எதிராக பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் பிரேசில் நாட்டில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸார் அதிரடி சோதனை
போதை பொருள் கும்பலை குறிவைத்து பிரேசிலின் மூன்று மாகாணங்களில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ரியோ டி ஜெனிரோவின் காம்ப்ளெக்சோ டா பென்ஹா பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக சாவ் பாலோ மாகாணத்தில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
Getty Images
அத்துடன் வட கிழக்கு மாகாணமான பஹியாவில் நடத்தப்பட்ட சோதனையில் வெள்ளிக்கிழமை முதல் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆபரேஷன் ஷீல்டு என அழைக்கப்படும் காவல்துறையின் இந்த அதிரடி சோதனையானது கடற்கரை நகரான குவாருஜா-வில் கடந்த வியாழக்கிழமை சிறப்பு படை பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சாவ் பாலோ மாகாணத்தில் இதுவரை 58 பேரை பொலிஸார் இந்த ஆபரேஷன் கீழ் கைது செய்துள்ளனர்.
Reuters
மேலும் உள்ளூர் ஊடகத்தின் தகவல் படி, 385 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |