பிரேசிலில் பள்ளி முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு: 16 வயது மாணவி நேர்ந்த பரிதாபம்
பிரேசிலில் பள்ளியில் முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 16 வயது சிறுமி கொல்லப்பட்டுள்ளார்.
பள்ளியில் துப்பாக்கி சூடு
தெற்கு பிரேசிலின் Londrina பெருநகர பகுதியில் உள்ள பள்ளியில் முன்னாள் மாணவர் ஒருவரால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட முன்னாள் மாணவருக்கு டிரான்ஸ்கிரிப்ட் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார், ஆனால் திடீரென மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரேசில் ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாக்குதல் நடத்திய நபர் 21 வயதுடையவர் என தெரிவித்துள்ளது.
16 வயது சிறுமி உயிரிழப்பு
இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 16 வயது மாணவி கொல்லப்பட்டுள்ளார், அத்துடன் ஆண் மாணவர் ஒருவர் துப்பாக்கி சூடு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாநில பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் ட்விட்டரில் எழுதியுள்ள கருத்தில், மற்றொரு இளம் உயிர் வெறுப்பு மற்றும் வன்முறை மூலமாக பிரிந்துள்ளது, நமது சமூகத்தில் மற்றும் நமது பள்ளிகளில் இது போன்ற சம்பவங்களை ஒருபோது பொறுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |