அமெரிக்காவிற்கு எதிராக 50 சதவீத வரி விதிப்போம்: பிரேசில் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பிற்கு எதிராக பிரேசில் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரேசிலிய பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதிப்பதாக அறிவித்ததற்கு பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) பதிலடி அளித்துள்ளார்.
“அவர் எங்களுக்கு 50% வரி விதித்தால், நாங்களும் அவருக்கு 50% வரி விதிப்போம்” என லூலா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இது குறித்து Record TV சேனலில் பேசிய லூலா, “முதலில் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்போம். அது தோல்வியடைந்தால், பதில் நடவடிக்கை அவசியம்” என கூறினார்.
அதே நேரத்தில், அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் (WTO) முறையிடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப், பிரேசிலின் தற்போதைய ஆட்சி முந்தைய ஜனாதிபதி ஜெயிர் போல்சனாரோவுக்கு எதிராக அரசியல் வேட்டை நடத்துகிறது எனக் குற்றம்சாட்டிய பின்னர், இந்த வரி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

சீனாவிற்கு செல்லவிருந்த கப்பலை இந்தியாவிற்கு வரவைத்த அம்பானி - அமெரிக்காவிலிருந்து ஈத்தேன் இறக்குமதி
போல்சனாரோ தற்போது 2022 தேர்தல் முடிவுகளை நிராகரிக்க முயற்சித்த வழக்கில் நீதிமன்றத்தில் நின்று விசாரணை எதிர்கொண்டு வருகிறார்.
லூலா, பால்சனாரோவின் மகன் எடுவார்டோ அமெரிக்காவுக்குச் சென்று ட்ரம்பின் எண்ணத்தை மாற்ற முயற்சி செய்தது வரிக்கட்டுப்பாட்டுக்கு காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.
"ஒரு முன்னாள் ஜனாதிபதி தன்னுடைய நாட்டை எப்படியெல்லாம் சிக்கலுக்குள் இழுக்கிறார்" எனக் கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்நிலையில், பால்சனாரோ, தனது ஆட்சியில் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது எனக் கூறியுள்ளார். மேலும், "நாட்டின் அரசியல் நிலைமை மீள வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |