பிரித்தானியாவின் பில் கேட்ஸ் மற்றும் மகள் உட்பட 6 பேர்கள்... புயலில் சிக்கிய படகு குறித்த புதிய பின்னணி
பிரித்தானியாவின் பில் கேட்ஸ் என அறியப்படும் Mike Lynch மற்றும் அவரது மகள் உட்பட 6 பேர்கள் படகு விபத்தில் சிக்கி மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
4 பிரித்தானியர்கள் மாயம்
இத்தாலியின் வடக்கே அமைந்துள்ள Sicily தீவுக்கு அருகே திங்களன்று விடிகாலை 4 மணிக்கு 14 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான Bayesian என்ற சொகுசு படகு புயலில் சிக்கி மூழ்கியுள்ளது.
இந்த நிலையில், தற்போது வெளிவரும் தகவல்களில், பிரித்தானியாவின் பில் கேட்ஸ் என அறியப்படும் 59 வயதான Mike Lynch மற்றும் அவரது மகள் 18 வயது ஹன்னா, இவர்களுடன் மோர்கன் ஸ்டான்லியின் சர்வதேச தலைவர் ஜொனாதன் ப்ளூமர் உட்பட 4 பிரித்தானியர்கள் மாயமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட ஒருவர், கனேடியரான சமையற்கலைஞர் Ricardo Thomas என அடையாளம் காணப்பட்டுள்ளது. 12 பயணிகளும் 10 ஊழியர்களுடன் Bayesian என்ற சொகுசு படகு Porticello துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், புயல் தாக்கியுள்ளது.
உலகிலேயே இரண்டாவது உயரம் கொண்ட சொகுசு படகு இது. சம்பவத்தின் போது Mike Lynch மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களின் சிறப்பு விருந்தினர்களுக்கு குறித்த படகில் விருந்தளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஒரு முறைகேடு வழக்கில் சாதகமான தீர்ப்பு அளிக்கப்பட்டதை அடுத்தே இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 852 மில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்பு கொண்ட Mike Lynch தனது Autonomy என்ற மென்பொருள் நிறுவனத்தை 2011ல் Hewlett-Packard நிறுவனத்திற்கு 8.5 பில்லியன் பவுண்டுகள் தொகைக்கு விற்பனை செய்தார்.
15 பேர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து 2023ல் அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். தனது நிறுவனத்தின் சந்தை மதிப்பை உயர்த்தி, விற்பனை செய்துள்ளார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு.
இந்த வழக்கில் சிக்கிய இன்னொரு முக்கிய நபர் சாலை விபத்தில் சிக்கி பலியானதன் அடுத்த நாள், படகு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் Mike Lynch-ன் மனைவி Angela Bacares பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
ஹெலிகொப்டர்கள், படகுகள் மற்றும் சிறப்பு குழுவினர் என தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் 4 பிரித்தானியர்கள் என 6 பேர் மாயமாகியுள்ளனர்.
படகின் மாலுமி உட்பட 15 பேர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். முறைகேடு வழக்கில் சிக்கி அமெரிக்காவில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்நோக்கியிருந்தவர் Mike Lynch.
ஆனால் மொத்த வழக்கில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். குறித்த படகில் நியூசிலாந்து, மியான்மர், இலங்கை, கனடா, பிரான்ஸ் உட்பட பல நாட்டவர்கள் சம்பவத்தின் போது இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |