ரஷ்யா எல்லையில் பிரித்தானிய விமானப்படை விமானங்கள்! நடுவானில் பரபரப்பு
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, அதற்கெதிராக அமெரிக்கா, பிரித்தானியா முதல் பல நாடுகள் அணிவகுத்து நிற்கின்றன.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் செய்வதிலிருந்து, ரஷ்யாவுக்கெதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்நாடுகள் எடுத்துக்கொண்டே இருக்க, அதனால் ரஷ்ய தரப்பு கடும் எரிச்சலடைந்துள்ளது.
ரஷ்ய எல்லைக்கருகே பிரித்தானிய விமானப்படை விமானங்கள்
இந்நிலையில், ரஷ்ய எல்லைக்கருகே பிரித்தானிய விமானப்படை விமானங்கள் பறந்த விடயம் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இரண்டு விமானப்படை விமானங்கள் உட்பட, மூன்று பிரித்தானிய விமானங்கள் ரஷ்ய எல்லைக்கருகே பறந்ததாகவும், அவற்றை ரஷ்யவிமானப்படை விமானங்கள் இடைமறித்ததாகவும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய போர் விமானங்கள் நெருங்கியதும், பிரித்தானிய விமானங்கள் திரும்பிச் சென்றுவிட்டதாகவும், அவை ரஷ்ய வான் எல்லைக்குள் நுழையவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா தரப்பு அளித்துள்ள விளக்கம்
பின்னர் இந்த விடயத்தை உறுதி செய்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம், பிரித்தானிய விமானப்படை விமானங்கள் அந்த இடத்தில் காணப்பட்டது உண்மைதான் என்றும், ஆனால், அது சர்வதேச வான் எல்லையில் வழக்கமாக நடக்கும் ஆபரேஷன்தான் என்றும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |