வெளிநாட்டில் துப்பாக்கி முனையில் கொடூர தாக்குதலுக்கு இலக்கான பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி: திகில் சம்பவம்
தென்னாப்பிரிக்காவில் மர்ம நபர்களால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி ஒருவர் துப்பாக்கி முனையில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்களால் இவர்கள் இருவரும்
குறித்த விமானி, அந்த மர்ம நபர்களால் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@getty
பெயர் குறிப்பிடப்படாத அந்த விமானி சம்பவத்தன்று ஜோகன்னஸ்பர்க் நகரில் பகல் வேளையில் ஜாகிங் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் விமான ஊழியர் ஒருவரும் சென்றுள்ளார்.
இந்த நிலையிலேயே மர்ம நபர்களால் இவர்கள் இருவரும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானி மற்றும் அந்த ஊழியரை குறித்த மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்று, துப்பாக்கி முனையில் சிறை பிடித்துள்ளனனர்.
ஆனால் கைகலப்பின் போது ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், விமானியை கத்தியால் தாக்கியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இருவரும் அந்த மர்ம நபர்களிடம் இருந்து தப்பியதாகவே கூறப்படுகிறது.
பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்த வேண்டாம்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் பொதுவாக தங்கள் ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தும், அந்த விமானியும் ஊழியரும் ஜாகிங் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு என பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் சொகுசு ஹொட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறது.
@getty
அந்த ஹொட்டலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். மேலும், அந்த ஹொட்டல் அமைந்துள்ள பகுதியானது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள இடம் என்பதால் நகரத்திற்குள் ஒரு நகரம் என்றே கூறுகின்றனர்.
இந்த நிலையில் தான் எச்சரிக்கையை மீறி, விமானியும் அந்த ஊழியரும் ஜாகிங் சென்றுள்ளனர். குற்றங்களின் அதிக விகிதம் காரணமாக ஜோகன்னஸ்பர்க் நகரம் உலகின் மிக ஆபத்தான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |