விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர்: பயணிகள் அதிர்ச்சி
குரோஷியாவில் இருந்து பிரித்தானியா நோக்கி பறக்க இருந்த ரியான்ஏர் விமானத்தின் கதவுகளை பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் ஒருவர் திறக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த குத்துச்சண்டை வீரர்
கடந்த ஜூன் 30 திகதி குரோஷியாவின் ஜாதரில்(Zadar) இருந்து பிரித்தானியாவின் லண்டன் நோக்கி பயணத்தை தொடங்க ரியான்ஏர் விமானம் தயாராக இருந்தது.
அப்போது விமானத்திற்குள் இருந்த 27 வயது மதிக்கத்தக்க பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் திடீரென தனது இருக்கையில் இருந்து குதித்து எழுந்து அதன் விமானத்தின் கதவினை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து விமானத்திற்குள் பதற்றம் ஏற்பட்டது, விமானத்தின் கதவினை திறக்க முயற்சித்த நபரின் பெயர் தெரியவராத நிலையில், அவர் பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்ட பிரிட்டிஷ் சுற்றுலா பயணி அங்கிருந்தவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு விமானம் பறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன் குரோஷிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விமான நிலையத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.
சுய துன்புறுத்தல் செய்து கொண்ட இளைஞர்
இந்நிலையில் உள்ளூர் ஊடகங்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இளைஞர் தம்மை கைது செய்ய மறுப்பு தெரிவித்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இளைஞரிடம் தற்போது விசாரணை நடந்து வருவதாகும், அப்போது சம்பந்தப்பட்ட இளைஞர் பொலிஸ் அதிகாரிகளை உடல் ரீதியாக தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் அவர் வாகனத்திலும், மருத்துவமனையில் தன்னை தானே காயப்படுத்திக் கொள்ள முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |