பிரான்சில் கடலில் குளிக்கச் சென்ற பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்
பிரான்சில் கடலில் குளிக்கச் சென்ற பிரித்தானிய இளைஞர் ஒருவரை அலை அடித்துச் சென்றது.
கடலில் குளிக்கச் சென்ற பிரித்தானியருக்கு நேர்ந்த துயரம்
தெற்கு பிரான்சில் கடலில் குளிக்கச் சென்ற 25 வயதுடைய பிரித்தானிய இளைஞர் ஒருவரை அலை கடலுக்குள் இழுத்துச் செல்ல, அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 9.00 மணியளவில், Bordeaux நகரில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றிற்கு அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டார்கள்.
Photo by Thibaud MORITZ / AFP
அதன்படி அங்கு விரைந்த உதவிக்குழுவினர் கடலில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த அந்த இளைஞரை மீட்டு கரைக்குக் கொண்டுவந்தார்கள். ஆனால், உயிர் காக்கும் சிகிச்சையளித்தும், அவர்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
பிரான்ஸ் நாட்டுச் சிறுமி கடலில் மூழ்கி பலி
அதேபோல, அதே ஞாயிற்றுக்கிழமை, அதே கடற்கரையில் வேறொரு இடத்தில், 4 வயது சிறுமி ஒருத்தி தண்ணீரில் மூழ்கினாள். மருத்துவ உதவிக்குழுவினர் அவளை மீட்டு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.
The Local Europe
அவளது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, நீந்தச் செல்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும், பாதுகாப்பற்ற மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.