கத்தாரில் இருந்து நாடு திரும்பும் பிரித்தானிய ரசிகர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை: இந்த அறிகுறிகள் கவனம்
கத்தார் உலகக் கோப்பையில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியுள்ள நிலையில், நாடு திரும்பும் கால்பந்து ரசிகர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டகக் காய்ச்சலின் அறிகுறிகள்
கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிவாய்ப்பை இழந்தது.
@reuters
இந்த நிலையில், கொடிய ஒட்டகக் காய்ச்சலின் அறிகுறிகள் தொடர்பாக இங்கிலாந்து முழுவதும் உள்ள மருத்துவர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நாடு திரும்பும் இங்கிலாந்து ரசிகர்கள் மூச்சுத்திணறல் மற்றும் கடும் காய்ச்சலுடன் மருத்துவமனைகளை நாடினால், அவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரித்தானிய சுகாதாரத்துறை கோரிக்கை வைத்துள்ளது.
மத்தியக்கிழக்கு நாடுகளில் சமீபத்திய ஆண்டுகளில் ஒட்டகக் காய்ச்சலுக்கு 1,000 பேர்கள் வரையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். தற்போது கால்பந்து கொண்டாட்டங்களில் பங்கேற்க கத்தாரில் திரண்டுள்ள உலகம் முழுவதிலும் உள்ள மக்களால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பை விடவும் ஆபத்தானது
பிரித்தானிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் ஒட்டங்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளதால் இந்த எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது. ஒட்டகக் காய்ச்சலானாது கொரோனா பாதிப்பை விடவும் ஆபத்தானது எனவும் பாதிக்கப்பட்ட நான்கில் மூவர் இறக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
@reuters
கத்தாரில் இருந்து திரும்பும் பயணிகளில் ஒட்டகக் காய்ச்சலின் அறிகுறிகள் தொடர்பில் மருத்துவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கத்தாரில் ஒட்டகங்களுடன் நேரம் செலவிட்டவர்கள், ஒட்டகத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொண்டவர்கள், ஒட்டகத்தின் பால் அருந்தியவர்கள் என கண்காணிப்பு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
2,600 பேர்களுக்கு ஒட்டகக் காய்ச்சல்
12 கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏப்ரல் 2012 முதல் அக்டோபர் 2022 வரை 2,600 பேர்களுக்கு ஒட்டகக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 36% மக்கள் அல்லது 935 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
@getty
சிலருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படாது. ஆனால் பலர் கடுமையான காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிக்குள்ளாவார்கள்.