பிரதமர் வேட்பாளராக அண்ணாமலையை அறிவிக்க முடியுமா? சீமான் ஆதரவு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் நாங்கள் ஆதரவு தருகிறோம் என சீமான் கூறியுள்ளார்.
பிரதமர் வேட்பாளர் அண்ணாமலை
தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, "அடுத்து நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தர ராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா?
அப்படி அறிவித்தால் எங்களுடைய கொள்கை கோட்பாட்டை தூக்கி எறிந்துவிட்டு ஆதரவு தருகிறோம். இதில், தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. தமிழர்கள் என்பதால் ஆதரவு தருகிறோம். உண்மையாகவே, தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பாஜகவுக்கு அக்கறை இல்லை" என்றார்.
தமிழ் புறக்கணிப்பு
மேலும் பேசிய சீமான், "நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கல்வெட்டில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. தமிழை தொடர்ந்து புறக்கணிக்கின்றனர். தேர்தலில் தோற்றவருக்கு கேபினட் அமைச்சர் பதவியை பாஜக கொடுக்கிறது.
ஆனால், தேர்தலில் வென்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்தது. இதிலிருந்தே தமிழர்களை பாஜக எப்படி பார்க்கிறது என்பது தெரிகிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |