கனடாவில் 80 சதவீத இந்திய மாணவர்களுக்கு விசா மறுப்பு
கனடாவில் இந்திய மாணவர்களுக்கு விசா மறுப்பு அதிகரித்துள்ளது.
2025-ல் கனடா சர்வதேச மாணவர்களுக்கு விதிகளை கடுமையாக்கியதன் விளைவாக, இந்திய மாணவர்களின் 80 சதவீத விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பான IRCC வெளியிட்ட தரவுகளின்படி, மொத்தமாக 62 சதவீத வெளிநாட்டு மாணவர்களின் விசா மறுக்கப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டின் 52 சதவீதம் மற்றும் முந்தைய ஆண்டுகளின் சராசரி 40 சதவீதத்தை விட அதிகமாகும்.
இந்த மாற்றத்தை, கனடா தனது கல்வி மற்றும் குடிவரவு கொள்கைகளை மீளாய்வு செய்யும் முக்கிய அடையாளமாக பார்க்கிறது.
2024-ல் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் கனடாவிற்கு வந்துள்ளனர். அவர்களில் 41 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஆனால், 2025-ல் கனடா 4,37,000 study permits மட்டுமே வழங்க திட்டமிட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் குறைவாகும்.
சர்வதேச மாணவர்களுக்கு விசா விதிகள்
மாணவர்கள் குறைந்தபட்சம் 20,635 கனேடிய டொலர் நிதி ஆதாரத்தை நிரூபிக்க வேண்டும். மேலும், தெளிவான படிப்பு திட்டம் (study plans) மற்றும் பிழையில்லாத ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Post-Graduation Work Permit பெற பல்கலைக்கழக பட்டதாரிகள் B2 நிலை மொழி தெரிவையும், கல்லூரி பட்டதாரிகள் B1 நிலையையும் கடந்திருக்க வேண்டும்.
இதனிடையே Student Direct Stream திட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த மாற்றங்கள் மாணவர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பல சிரமங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த புதிய விதிகள் எதிர்காலத்தில் இன்னும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
canada student visa rejection 2025, indian students canada visa news, canada visa rules for students, ircc visa refusal rate 2025, study permit canada 2025, canada immigration news, canada postgraduate work permit rules