நாடு கடத்தப்படுவோர் கடவுச்சீட்டுகளை அரசு ரத்து செய்யும்... ஆசிய நாடொன்றின் அமைச்சர் எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து நாடுகடத்தப்படும் பாகிஸ்தான் மக்களின் கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது வழக்கும் பதியப்படும் என உள்விவகார அமைச்சர் மொஹ்சின் நக்வி எச்சரித்துள்ளார்.
கடவுச்சீட்டுகளை முடக்கும்
கடந்த 16 மாதங்களில் சவுதி அரேபியா மொத்தம் 5,033 பாகிஸ்தானிய பிச்சைக்காரர்களை நாடு கடத்தியுள்ளது, அதே நேரத்தில் கடந்த 16 மாதங்களில் ஐந்து நாடுகளில் பிச்சை எடுத்ததற்காக 369 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடு கடத்தப்படும் பாகிஸ்தானியர்களின் கடவுச்சீட்டுகளை அரசாங்கம் முடக்கும் என்றும், புதிய பயண ஆவணங்களை வழங்கும் செயல்முறையை கடுமையாக்கும் என்றும் கடந்த மாதம் உள்விவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான்
இதனிடையே, ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுமார் 106 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில் கடந்த மாதம் இஸ்லாமாபாத் திரும்பியுள்ளனர். இந்த நிலையில், உள்விவகார அமைச்சர் மொஹ்சின் நக்வி தலைமையில் இஸ்லாமாபாத்தில் ஒரு முக்கியமான கூட்டம் நடைபெற்றது,
ஐந்து ஆண்டுகளுக்கு
அதில் நாடுகடத்தப்பட்டவர்களின் கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் நாடுகடத்தப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு கடவுச்சீட்டு கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்கப்படும்.
மேலும், கடவுச்சீட்டு சட்டங்களை மேலதிகமாக கடுமையாக்கவும் மேம்படுத்தவும் உள்விவகார செயலாளர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
இதனிடையே, நாடுகடத்தப்பட்டவர்கள் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகவும், எதிர்காலத்தில் அவர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாது என்றும் நக்வி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |