63 உயிர்களை பலி வாங்கிய படகு விபத்து! தேடும் பணியில் மீட்பு படையினர்
ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி பயணித்த படகு விபத்திற்குள்ளானதில் 63 பேர் பலியாகியுள்ளனர்.
கேனரி தீவுகள் நோக்கி பயணித்த படகு
செனகல் நாட்டைச் சேர்ந்த 63 பேர் படகு ஒன்றில் பயணித்துள்ளனர். இந்த படகு மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் இருந்து ஸ்பானிஷின் கேனரி தீவுகள் நோக்கி சென்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த படகு கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்துள்ளது.
இதில் படகில் பயணித்த அனைவரும் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
உடல்கள் மீட்பு
மூழ்கியவர்களில் 56 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 7 பேரின் உடல்களை தேடி வருவதாக ஐ.நாவின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பு உபகரணம் இல்லாததால் இந்த உயிர்சேதம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் புலம்பெயர்வுக்காக செனகல் மக்கள் கேனரி தீவுக்கு பயணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Reuters
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |