கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் எப்போது? குடும்பத்தினர் அறிவிப்பு
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
மறைந்தார் விஜயகாந்த்
சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வந்த நிலையில், இன்று காலை 6:10 மணியளவில் மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டார்.
உடல் நல்லடக்கம்
மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.
அத்துடன் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் விஜயகாந்த்தின் உடல் அவரது வீட்டில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் அஞ்சலிக்காக இன்றும், நாளையும் அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது.
நாளை(டிசம்பர் 29ம் திகதி) மாலை 4.45 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Captain Vijayakanth, Vijayakanth, DMDK, Tamil Nadu, Premalatha Vijayakanth,RIP